கடலூரில் பந்த்- புதுவை எல்லை வரை தனியார் பஸ்கள் இயக்கம்

முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
கடலூரில் பந்த்- புதுவை எல்லை வரை தனியார் பஸ்கள் இயக்கம்
Published on

புதுச்சேரி:

கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.

ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.

மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com