பிரதமரின் விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்த காட்சி.
பிரதமரின் விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக புதுவை பா.ஜனதா ஓ.பி.சி. அணியின் தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமையில் நெல்லித்தோப்பு பகுதியில் மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இத்திட்டத்துக்கு மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கைவினை தொழிலாளர்கள் பயன் அடையும் வகையில் அமைந்துள்ளது.

இதனை பொதுமக்கள் பார்த்து பயனடைந்தனர். இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியின் போது 18தொழில்களின் அஞ்சல் தலைகள் அடங்கிய பிரதமர் மோடி வெளியிட்ட தொகுப்பையும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி

யடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஓ.பி.சி. அணியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com