search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் எதிர்ப்பு
    X

    கோப்பு படம்.

    மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் எதிர்ப்பு

    • புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவை ரெஜிஸ்டர் ஆப்போசிட்டியில் பதிவு பெற்ற சங்கங்கள் ஆகும்.
    • ஆனால் செலவு செய்வதற்கு முன்பே பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிற புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை புதிய அமைப்பில் இணைத்துள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

    புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவை ரெஜிஸ்டர் ஆப்போசிட்டியில் பதிவு பெற்ற சங்கங்கள் ஆகும். அவற்றுக்கென்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளது.

    அவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டெவ லப்மெண்ட் ஆத்தாரிட்டி ஆப் புதுவை என்ற அமைப்புடன் இணைக்க இந்த புதிய மாநில விளையாட்டு கவுன்சிலின் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும்.

    ஆனால் புதுவை அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புதுவை மாநில விளையாட்டு கவுன்சிலின் பொதுக்குழுவை கூட்டாமல் உள்ளது.

    இதற்காக பலமுறை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் வரை கூட்டாமல் காலம் கடத்தி வரு கின்றனர். புதிய மாநில விளையாட்டு கவுன்சில் மூலம் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் செலவு செய்வதற்கு முன்பே பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

    வரவு செலவு கணக்குகளை பல வருடங்களாக தாக்கல் செய்யாமல் உள்ளதால் அந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே, பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமலே கவுன்சிலின் சட்ட விதிகளுக்கு புறம்பாக புதிய மாநில விளையாட்டு கவுன்சில் மட்டும் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளியை புதிதாக பதியப்பட்ட போர்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுவை என்ற அமைப்பில் இணைத்து விட்டதாக சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×