search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் ஒலிம்பிக் பயிற்சி முகாம்
    X

    போட்டியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த காட்சி.

    புதுச்சேரியில் ஒலிம்பிக் பயிற்சி முகாம்

    • கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் நேஷனல் கோச்சிங் கேம்ப் தொடக்க விழா நடந்தது.
    • எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அனிபால் கென்னடி, பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் 19 வயதுக்குட்பட்ட சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கான வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் நேஷனல் கோச்சிங் கேம்ப் தொடக்க விழா நடந்தது.

    எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அனிபால் கென்னடி, பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இதில் புதுவை, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, குஜராத், சட்டீஸ்கர், டெல்லி, கேரளா, அரியானா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 17 மாநிலங்களிலிருந்து 250 ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    5 நாட்கள் நடக்கும் போட்டியில், 15 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 2023-ல் ஜெர்மனி நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் விளையாட்டு வீரர்கள் , பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×