என் மலர்
புதுச்சேரி

புதிய பாலம் கட்டும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
புதிய பாலம் கட்டும் பணி- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- புதுவை அருகே வில்லியனூர் கொம்யூனில் தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் பெருங்களூர் ஏரியில் இருந்து வரும் களிங்கல் வாய்க்காலில், தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசனகோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் மற்றும் என்ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






