search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செவித்திறன், பேச்சு குறைபாடு தேசிய கருத்தரங்கம்
    X

    செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    செவித்திறன், பேச்சு குறைபாடு தேசிய கருத்தரங்கம்

    • நவீன தொழில்நுட்பங்கள் பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் துறையின் இலவச சேவைகள் குறித்தும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடங்கள் பற்றியும் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் பற்றிய துறையின் சார்பாக நவீன தொழில்நுட்பங்கள் பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்கான தொடக்க விழா 7-ந்தேதி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கை விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதிர் தொடங்கி வைத்தார். ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் இயங்கும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் துறையின் இலவச சேவைகள் குறித்தும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடங்கள் பற்றியும் பேசினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ஜெயகர் கருத்தரங்கை பற்றிய நினைவு நூலை வெளியீட்டு பேசினார்.

    கருத்தரங்கில் இந்தியா விலிருந்து 400-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர். 88 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    மேலும் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா ஆன்லைன் மூலமாக சிறப்புரை ஆற்றினார்.முன்னதாக இத்துறையின் தலைவர் பேராசிரியர் ராஜன் அவர்கள் வரவேற்று பேசினார். டாக்டர் ராஜலட்சுமி நன்றியுரை கூறினார்

    விழாவிற்கான ஏற்பாடு களை இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.

    Next Story
    ×