அருங்காட்சியகத்தில் திங்கள் விழா

மாணவர் திருக்குறள் அரங்கில், திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.கற்பதில் முதன்மை கொள் என்ற பாரதிதாசன் கவிதை வரியாக தலைப்பில் நடந்த கவியரங்கில் 24 பேர் கவிதை வாசித்தனர்.
அருங்காட்சியகத்தில் திங்கள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
அருங்காட்சியகத்தில் திங்கள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் நடக்கும் திங்கள் விழா, புதுமைக் கவிஞர் பாரதி என்ற தலைப்பில் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள்வாழ்த்துரை வழங்கினார். இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டல துணை தலைவர் சண்முகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.செயலாளர் வள்ளி, கிருஷ்ணகுமார், ரமேஷ் பைரவி, லட்சுமிதேவி முன்னிலை வகித்தனர். மாணவர் திருக்குறள் அரங்கில், திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எங்கள் ஆசிரியர் என்ற தலைப்பில் பேராசிரியர் விசாலாட்சி, ஜெயந்தி ராஜவேலு, மீனாட்சி தேவி கணேஷ் உரையாற்றினர். கற்பதில் முதன்மை கொள் என்ற பாரதிதாசன் கவிதை வரியாக தலைப்பில் நடந்த கவியரங்கில் 24 பேர் கவிதை வாசித்தனர். முன்னதாக மதன் வரவேற்றார்.

முடிவில் கோமதி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com