மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில் ரெட்பாக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கைலாசம் மதுசூதனன், முதுகலை- கணினித்துறை தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து, கொண்டனர்.
கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வில் கையெழுத்திட்டனர்.
கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வில் கையெழுத்திட்டனர்.
Published on

புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியோடு, ரெட்பாக்ஸ் எஜூகேஷன் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

எம்.சி.ஏ., மாணவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம், கார்ப்ரேட் பயிற்சி, பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆங்கில புலமைக்கான பயிற்சி, மென்பொருள் கருவியிலான பயிற்சியை மொபைல் மற்றும் இணையவழி பயன்பாட்டு தளம் வழியாக வழங்குதல், வளாக வேலை வாய்ப்பிற்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

ரெட்பாக்ஸ் எஜூகேஷன் நிறுவன இயக்குனர்நிர்மலேஷ்வரன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வில் கையெழுத்திட்டனர். பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கைலாசம் மதுசூதனன், முதுகலை- கணினித்துறை தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து, கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com