மதுபோதையில் கூலி தொழிலாளி சாவு

புதுவை தட்டாஞ்சாவடி மேட்டு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவர் தலைமை செயலகத்தில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் துரைராஜ் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்தார்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி மேட்டு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது48). இவர் தலைமை செயலகத்தில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அன்பரசி(40). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். துரைராஜிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில் பணிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற துரைராஜ் மேட்டுப்பாளையம் சாராயக் கடையில் மது அருந்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் துரைராஜ் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அன்பரசி கணவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அன்பரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com