சேதமான குடிநீர் குழாய் உடனடி சீரமைப்பு-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தமிழ் தாய் நகரில் குடித்தண்ணீர் அழுத்தம் குறைவு ஏற்பட்டது.உப்பளம் தொகுதி டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள ப-வடிவ யூட்ரெயின் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
அப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தமிழ் தாய் நகரில் குடித்தண்ணீர் அழுத்தம் குறைவு ஏற்பட்டது. இதை அப்பகுதி பொதுமக்கள் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் தெரிவித்தனர்.

உடனே அப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள பைப் லைன் இணைப்புகளை புதுப்பித்து சரி செய்து கொடுத்தனர். மேலும் உப்பளம் தொகுதி டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள ப-வடிவ யூட்ரெயின் பணியை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் படி அறிவுத்தினார். இதனை தொடர்ந்து உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாரதிமில் சாலை மற்றும் பழைய மருத்துவமனை சந்து ஆகிய இடங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் நேதாஜி நகர் 3 பஞ்சயதார்கள், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தி.மு.க. கிளை செயலாளர்கள் செல்வம்,ராகேஷ் மற்றும் ராஜா பிரபாகரன், மற்றும் செழியன், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com