search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலைகளில் மாடுகள் திரிந்தால் வாட்ஸ்அப்பில் புகார் கூறலாம்
    X

    கோப்பு படம்.

    சாலைகளில் மாடுகள் திரிந்தால் வாட்ஸ்அப்பில் புகார் கூறலாம்

    • சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.
    • சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:-

    சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க கால்நடைகளை சாலைகளில் விடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதையும் மீறி சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 70 மாடுகளுக்கு ரூ.63 ஆயிரத்து 260 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது. மாடுகளின் ஒரு கொம்பில் மட்டும் சிவப்பு வர்ணம் பூசி அடை யாளம் காட்டப்படுகிறது.

    இந்த மாடுகள் பிடிபட்டால் நகராட்சி மூலம் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிப்பதோடு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×