நிதி நிறுவன ஊழியரை தாக்கிய நண்பர்கள்

புதுவை தர்மாபுரி கலைமகள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை தர்மாபுரி கலைமகள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் உழவர்கரை சக்திநகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார். அப்போது இவரது நண்பர்களான முத்திரையர்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், சக்திநகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் நிதி நிறுவன ஊழியர் செந்தில்குமாரை மது குடிக்க அழைத்தனர்.

அதற்கு செந்தில்குமார் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த செந்தில்குமார் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com