இளைஞர் அமைதி முகாமில் பங்கேற்றவர்களுக்கு-கவர்னர் தமிழிசை பாராட்டு

தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது. இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இளைஞர் அமைதி முகாமில் பங்கேற்றவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
இளைஞர் அமைதி முகாமில் பங்கேற்றவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.

இந்த முகாமில் மத்திய அரசின் தேசிய விருதுபெற்ற சமூக சேவகர் ஆதவன்தலைமையில் புதுவையில் இருந்து மனோ, சபரீஸ்வரன், ஜெயப்பிரதா, காயத்திரி, குணசாவித்திரி, சுக்தேவ், ராகவன், வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, விளையாட்டுகள், சமூகப்பணி, மத நல்லிணக்கம் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

முகாமில் பங்கேற்ற இளைஞர்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மாளிகைக்கு அழைத்து பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com