மின்கட்டணத்தை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும்

புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-செயற்பொறியாளர் வேண்டுகோள்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், துப்புராயப்பேட், நெல்லித்தோப்பு, எல்லைப்பிள்ளைச் சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com