search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்வித்துறையின் அதிகாரிகள் அலட்சியத்தால்பிளஸ்-1 மாணவர்கள் பாதிப்பு -கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    கல்வித்துறையின் அதிகாரிகள் அலட்சியத்தால்பிளஸ்-1 மாணவர்கள் பாதிப்பு -கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    • கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்த ப்பட்டிருக்க வேண்டும்.
    • தற்போது நடக்கும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றாலும் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் தோல்வி அடைந்த வர்களாகவே கருதப்படுவர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்த ப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கல்வித்துறை அலட்சியத்தால் மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

    ஆனால் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 11-ம் வகுப்பு அரியர் செய்முறைத் தேர்வு நடத்தியது போலவும், அதில் ஏற்கனவே தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்கள் அனைவரும் வரவில்லை என்று குறிப்பிட்டு செய்முறைத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் உள் ஆய்வாளர் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

    இதனால் தற்போது நடக்கும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றாலும் 11-ம்

    வகுப்பு செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் தோல்வி அடைந்த வர்களாகவே கருதப்படுவர். இதனால் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதாத அல்லது வராத ஏறக்குறைய 344 மாணவர்கள் உயர் படிப்புக்குச் செல்ல முடியாமல் 1 ஆண்டு காலம் படிப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கல்வித்துறை இணை இயக்குநரின் அலட்சியத்தாலும், நிர்வாக தவறினாலும் இப்போது ஏறக்குறைய 344 மாணவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குரியாகி உள்ளது. எனவே, புதுவை அரசு, கல்வித்துறை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆகியவை 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×