search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ப்ளூ ஸ்டார் பள்ளி மாணவி திவ்யா 495 மதிப்பெண் பெற்று சாதனை
    X

    நிர்வாக அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சி. 

    ப்ளூ ஸ்டார் பள்ளி மாணவி திவ்யா 495 மதிப்பெண் பெற்று சாதனை

    • தாளாளர் மெய்வழி.ரவிக்குமார் பாராட்டு
    • அதிக மாணவர்கள் 400 முதல் 450 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் அருகே அரும்பார்த்தபுரம் ப்ளூ ஸ்டார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது.

    இப்பள்ளி கற்றல், அறிவூட்டல், வழிநடத்தல் ஆகிய 3 தாரக மந்திரங்களைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகிறது.

    மேலும் இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. கல்வியுடன் சேர்த்து விளையாட்டு, பொது அறிவு வளர்த்தல், மாணவர்களின் பல்திறன் திறமைகளை ஊக்குவித்தல், மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டை வளர்க்கும் விதத்தில் கல்வி போதிக்கப்படுகிறது.

    நடந்து முடிந்த 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனை புரிந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் ப்ளூ ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை புரிந்துள்ளனர். மேலும் அந்தப் பள்ளியின் மாணவி திவ்யா 500-க்கு 495 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநில அளவில் 2-ம் இடமும், பள்ளியின் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

    இவர் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்ணும், கணிதத்தில் 100 அறிவியலில் 100 சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளார். இப்பள்ளியின் மாணவி விஷ்ணு பிரியா 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் ஜீவிகா மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் 471 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கணிதப் பாடத்தில் 2 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மாணவர்கள் 400 முதல் 450 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் மெய்வழி ரவிக்குமார், முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார், துணை முதல்வர் சாலை சிவ செல்வம் மற்றும் நிர்வாக அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் எல்.கே.ஜி முதல் 11 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×