தற்காப்பு பயிற்சி நிறைவு விழா

புதுவை வீராம்பட்டி னத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.தற்காப்பு பயிற்சிகளை மாணவிகள் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.
பயிற்சியின் நிறைவு விழா ஜீவரத்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற காட்சி.
பயிற்சியின் நிறைவு விழா ஜீவரத்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை வீராம்பட்டி னத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியின் நிறைவு விழா ஜீவரத்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சகாயமேரி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சக்கரபாணி வரவேற்றார். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் சிறப்பு விருந்தி னராக பங்கேற்றார்.

தற்காப்பு கலை பயிற்சியாளர் சரவணன் கற்றுத்தந்த தற்காப்பு பயிற்சிகளை மாணவிகள் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

ஆபத்து காலங்களில் எவ்விதம் செயல்பட்டு காத்துக்கொள்வது, அச்சமின்றி எதிர்கொள்வது, பயிற்சியின் அவசியம் குறித்து மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர். தொடர்ந்து தற்காப்பு கலை பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் பிரசன்னா நன்றி கூறினார்.

விழாவில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சகாய மேரி பணி ஓய்வு பெறுவதை யொட்டி பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் சார்பில் தலைமை ஆசிரியை சகாயமேரியின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com