புதுவை ஏ.எப்.டி. திடலில் நடந்த வேளாண் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரிக்கு பரிசை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். 
புதுவை ஏ.எப்.டி. திடலில் நடந்த வேளாண் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரிக்கு பரிசை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். 

மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரிக்கு கோப்பை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் புதுவை மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரியின் கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக, காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.

மேலும், சுமார் 12 பிரிகளில் பரிசுகளை பெற்றதுடன், இப்போட்டிக்கான சுழற்சி முறை கோப்பையையும் வென்றனர்.

இறுதி நாளில், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.

வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வெற்றிபெற்ற மாணவர்கள், வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com