search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழிப்புணர்வு பேரணி
    X

    பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவ துறை சார்பில், கர்ப்பபை வாய் புற்றுநோய் வாரத்தையொட்டி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி புதுவையில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு பேரணி

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரி மகப்பேறு மருத்துவ துறை சார்பில் கர்ப்பபை வாய் புற்றுநோய் வாரத்தை யொட்டி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சோதனை செய்வது நல்லதாகும் என்றார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி மகப்பேறு மருத்துவ துறை சார்பில் கர்ப்பபை வாய் புற்றுநோய் வாரத்தை யொட்டி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த பேரணிக்கு பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் தலைமை தாங்கினார். டாக்டர் பத்மா முன்னிலை வகித்தார்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் பேரணியை தொடக்கி வைத்து இந்த நோயின் தாக்கத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும் என்றார்.

    மருத்துவ கண்காணி ப்பாளர் பீட்டர் மனோகரன் பொதுவாக பெண்களுக்கு மார்பாக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் ஆகிய பிரச்சினை ஏற்படலாம். இதில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய ஒன்றாகும்.

    இதை ஆரம்ப கட்டத்திலே உரிய முறையான பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான தடுப்பூசியும் உள்ளது.

    எங்கள் பிம்ஸ் மருத்துவமனை மகப்பேறு மருத்துவ துறை சார்பில் இலவசமாக (13-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை இலவச கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சோதனை செய்வது நல்லதாகும் என்றார்.

    இதில் பேராசிரியர்கள் நிர்மலா, பாலோ, பவித்ரா உள்பட மருத்துவ நிபுணர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×