வாழை மரத்தை மாடு மேய்ந்த தகராறில் பெண் மீது தாக்குதல்

கணவன்-மனைவி மீது புகார்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் லோகாம்பிகை (வயது58). இவர் தனது வீட்டின் எதிரே வாழை மரம் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த வாழை மரத்தை மாடு மேய்ந்து சேதப்படுத்தியது. இதனை கண்ட லோகாம்பிகை அந்த மாட்டை விரட்டி விட்டு யாருடைய மாடு என்று விசாரித்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த அச்சுதன் மேனன் மற்றும் அவரது மனைவி அன்பரசி ஆகியோர் லோகாம்பிகையை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கல்லால் தாக்கினர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com