உழவர்கரை தொகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் வக்கீல் சசிபாலன் ஆய்வு

அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பிச்சவீரன்பேட்டை, குமரன் நகர் பகுதியை வக்கீல் சசிபாலன்  பார்வையிட்ட காட்.சி.
பிச்சவீரன்பேட்டை, குமரன் நகர் பகுதியை வக்கீல் சசிபாலன்  பார்வையிட்ட காட்.சி.
Published on

புதுச்சேரி:

புதுவை உழவர்கரை தொகுதிகுட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் பெய்த கனமழையின் போது பழமை வாய்ந்த அரசமரம் அங்குள்ள ஆட்டோ, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த வக்கீல் சசிபாலன் நேரடியாக அங்கு சென்று அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து பிச்சவீரன்பேட்டை, குமரன் நகர் பகுதியில் அவர் ஆய்வு செய்தார்.அப்போது அங்கு அரசு அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com