காசு வைத்து சூதாடிய 4 பேர் கைது

புதுவை அருகே தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஒரு கும்பல் பெரிய அளவில் காசு வைத்து சூதாடுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே ஒரு கும்பல் பெரிய அளவில் காசு வைத்து சூதாடுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த திலீப்(வயது32), வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்(33), குமரகுரு பள்ளத்தை சேர்ந்த மனோகரன்(47) மற்றும் வாணரப்பேட்டை அன்னை இந்திராநகரை சேர்ந்த முகமது ஷெரீப்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் 18 ஆயிரத்து 400 மற்றும் சீட்டு கட்டு ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com