ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் பயிற்சி முகாம்

கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், சம்பத் எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
முகாமில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், சம்பத் எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை ஊரக வளர்ச்சித்துறையின் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓட்டல் சன்வேயில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.

இதில் கோவா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, நாகாலாந்து மற்றும் 5 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். முகாமில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சம்பத் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். கலெக்டர் வல்லவன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக துணை செயலர் நிவேதிதாபிரசாத், தேசிய வாழ்வதார இயக்கம் உஷாரணி, வசுதாசுக்லா, தேசிய வள நபர்கள் பிரியங்காஷகா, அர்ச்சனா கோஷ், ஜான்சிராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வில்லியனூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி வைஷாக்பாகி நன்றி கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com