இந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் வியாபாரம் செய்ய துவங்கியது முதல் இதுவரை சுமார் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்
Published on

பீஜிங்:

இந்தியாவில் அறிமுகமான சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியடைந்துள்ள சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் எட்டியுள்ள வளர்ச்சியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை 2014-ம் ஆண்டு சியோமி நிறுவனம் கால் பதித்தது. அந்த வகையில் நாள் ஒன்றிற்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் இலக்கை மூன்று ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ளது. 

சியோமி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. சியோமி நிறுவனம் டுவிட்டரில் பிதிவிட்ட புகைப்படங்களில் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய விற்பனையில் படைத்துள்ள சாதனையை சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் Mi 3 ஸ்மார்ட்போனுடன் 2014-ம் ஆண்டு களமிறங்கியது. அன்று முதல் அனைவரும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இந்தியவில் சியோமியின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 4 இருப்பதாக தெரிவித்திருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 

சியோமி நிறுவனம் இந்தியாவில் கால் பதித்த நாள் முதல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட சியோமி ரெட்மி 4A ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் பிளாஷ் விற்பனையில் நான்கே நிமிடங்களில் இந்தியவில் சுமார் 250,000 ரெட்மி 4A ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 

துவக்கத்தில் ஆன்லைன் விற்பனையில் மட்டும் அதிக கவனம் செலுத்திய நிலையில், சமீப காலமாக ஆஃப்லைன் முறை விற்பனையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அந்த வகையில் பெங்களூரு டெல்லி உள்ளிட்ட நகரங்களில் Mi ஹோம் ஸ்டோர்ளை துவங்கியுள்ளது. விரைவில் சென்னை நகரிலும் Mi ஹோம் ஸ்டோரினை துவங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com