தனி விமானத்தில் வந்த ஆடை: உலகையே வியக்க வைத்த நடிகை ஜெண்டயாவின் 'ரெட் கார்பெட்' லுக்!

வைர நெக்லஸ் உடன் ஜொலித்த 'தி ஒடிஸி' பட நாயகி!
RedCarpetLook
Published on

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா, தான் கலந்துகொள்ள வேண்டிய சினிமா விழாவுக்காகப் பாரீஸிலிருந்து லண்டனுக்குத் தனி விமானம் மூலம் ஆடம்பர ஆடை ஒன்றை வரவழைத்து அணிந்துள்ள செய்தி தற்போது சர்வதேச அளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆடை வடிவமைப்பு ஷோ..

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட தயாரிப்பான 'தி ஒடிஸி' என்ற திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக 29 வயது நடிகை ஜெண்டயா தயாராகி கொண்டிருந்தார்.

அதே நாளில், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலகப் புகழ்பெற்ற 'ஷியாபரெல்லி' நிறுவனத்தின் புதிய ஆடை வடிவமைப்பு ஷோ நடந்து கொண்டிருந்தது. அங்கு மாடல்கள் அணிந்து வந்த வெள்ளை நிற கவுன் ஆடை ஒன்று, ஜெண்டயாவின் ஆடை வடிவமைப்பாளரான லா ரோச்சைக் கவர்ந்தது.

தனி விமானத்தில் வந்த ஆடை..

லண்டனில் நேற்று இரவே விழா நடகவிருந்ததால், பாரீஸ் ஃபேஷன் ஷோவில் அறிமுகமான அந்த ஆடையை உடனடியாக லண்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ஆடை வடிவமைப்பாளர் லா ரோச், தனியாக ஒரு பிரைவேட் விமானத்தை ஏற்பாடு செய்து, அந்த ஆடையுடன் அவசர அவசரமாக லண்டனுக்கு வந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'இந்த ஆடையை இன்றிரவு நடக்கும் விழாவுக்காகத் தேர்வு செய்துள்ளேன், இதற்காக தனி விமானம் காத்திருக்கிறது' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

Diamond Necklace

88 கேரட் வைர நகைகள்..

பீங்கான் போன்ற மார்பக வடிவமைப்பும், கண்ணாடியிழை வேலைப்பாடுகளும் கொண்ட அந்த விலையுயர்ந்த ஆடையோடு, ஜெண்டயா 88 கேரட்டிற்கும் அதிகமான 'சோபார்ட்' பிராண்ட் அசல் வைர நகைகளை அணிந்து விழாவில் தோன்றினார். இதில் 12.37 கேரட் எடையுள்ள ஒரு பெரிய வைர நெக்லஸையும் அணிந்திருந்தார்.

கணவனுடன் நடித்த திரைப்படம்..

'தி ஒடிஸி' திரைப்படத்தில் ஜெண்டயா 'அத்தீனா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுவாரசியமாக, இந்த படத்தில் அவரது கணவரான டாம் ஹாலண்டும் 'டெலிமக்கஸ்' என்ற கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 17அன்று திரையிரங்குகளில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com