இங்கிலாந்தின் இளம் வயது மேயர்.. இந்திய வம்சாவளி இளைஞர் சாதனை!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.
இங்கிலாந்தின் இளம் வயது மேயர்.. இந்திய வம்சாவளி இளைஞர் சாதனை!
Published on

இங்கிலாந்தின் எல்ஸ்லேரி மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக துஷார் குமார் என்ற 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இள வயது மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டதாரியான இவரது தாய் பர்வின் ராணியும் துணை மேயராக இருந்தவர் ஆவார்.

தாயை பின்பற்றி அரசியல் ஈடுபபடு கொண்ட இவர், தனது 20 வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.

தொடர்ந்து எல்ஸ்ட்ரீ அண்ட் போர்ஹாம்வுட் டவுன் கவுன்சிலின் துணை மேயராகவும் பொறுப்பு வகித்தார். இவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இவர் ஒருமனதாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒருபுறம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், மறுபுறம் தனது உயர் படிப்பையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com