Iran War | ஈரான் போரால் பட்டினி அபாயம் ஏற்படும் - உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் எச்சரிக்கை!

உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
Iran War | ஈரான் போரால் பட்டினி அபாயம் ஏற்படும் - உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் எச்சரிக்கை!
Published on

மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் பொருளாதாரப் பாதிப்புகள் உலகம் முழுவதும் மேலும் எதிரொலிப்பதால், அது மேலும் பல மில்லியன் மக்களை பட்டினியை நோக்கி தள்ளக்கூடும் என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் எச்சரித்தார்.

"ஏற்கனவே சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர் விளைவுகள் அதிகரிக்கும்போது, ​​அந்த எண்ணிக்கை மிக மிக விரைவாக சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்," என்று இந்தர்மிட் கில் கூறினார்.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி வசந்தகாலக் கூட்டங்களின் ஒரு பகுதியாக கில் உரையாற்றினார்.

முக்கியமான எண்ணெய் விநியோக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தடுக்கப்பட்டதால், உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன, ஏனெனில் அவை எண்ணெய் சார்ந்த உள்ளீடுகளையே சார்ந்துள்ளன.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களின் விலை உயர்வு, நாடுகளை உணவு ஏற்றுமதியை நிறுத்திவிட்டு, தங்களுக்காக அதிக உணவை பதுக்கி வைக்கத் தூண்டக்கூடும். இது உணவு விலைகளை மேலும் உயர்த்தும்.

போரில் ஈடுபட்டுள்ள அல்லது பலவீனமான அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளில் உள்ள மக்களே மிகவும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் இந்த நாடுகளில் பசி பெருமளவில் தலைதூக்கத் தொடங்கும்.

தற்போது, ​​பெட்ரோலிய வேதிப்பொருட்களின் பற்றாக்குறையும் அதன் பொருளாதார விளைவுகளும் ஆசியாவில்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நெருக்கடி நீடிக்க நீடிக்க, அது முதலில் ஆப்பிரிக்காவிற்கு மிக வேகமாகப் பரவும்" என்று கில் விளக்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com