எபோலா வைரஸ் பரவல்: அவசரநிலை பிரகடனம் செய்த உலக சுகாதார அமைப்பு

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 88 பேர் உயிரிழந்தனர்.
எபோலா வைரஸ் பரவல்: அவசரநிலை பிரகடனம் செய்த உலக சுகாதார அமைப்பு
Published on

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக காங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவில் வேகமாக பரவிவருகிறது.

காங்கோவில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 88 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com