உங்கள் வீடு புகுந்து அடிப்போம்.. கொல்கத்தா வரை சண்டை நீளும் - இந்தியாவுக்கு பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்

இந்தியா தனது தோல்விகளை மறைக்க போலி ஆபரேஷன் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
உங்கள் வீடு புகுந்து அடிப்போம்.. கொல்கத்தா வரை சண்டை நீளும் - இந்தியாவுக்கு பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்
Published on

கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.

பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது வேலையைக் காட்டினால், அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு இந்தியப் படைகள் பதிலடி கொடுக்கும். இந்த முறை நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும்."என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "இந்தியா மீண்டும் தாக்க முயன்றால், கடந்த ஆண்டை விட பெரிய அவமானத்தைச் சந்திப்பார்கள்.

இந்த முறை சண்டை வெறும் 200-250 கிலோமீட்டருக்குள் முடிந்துவிடாது. நாங்கள் உங்கள் எல்லைக்குள் நுழைந்து, உங்கள் வீட்டிற்குள்ளேயே புகுந்து அடிப்போம். சண்டையை கொல்கத்தா வரை கொண்டு செல்வோம்.

இந்தியா தனது தோல்விகளை மறைக்க போலி ஆபரேஷன் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. தங்கள் ஆட்களின் சடலங்களை எல்லையில் போட்டுவிட்டு பயங்கராதிகள் என கதை கட்டுகிறது" என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com