

ஈரான் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகவும், அந்நாட்டுப் பிரதிநிதிகளே இதனைத் தன்னிடம் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஈரான் தற்போது எங்களிடம், தாங்கள் ஒரு சரிவு நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தங்கள் தலைமைத்துவச் சூழலைச் சீர்செய்ய அவர்கள் முயன்று வரும் நிலையில் (இதை அவர்களால் நிச்சயம் செய்ய முடியும் என்றே நான் நம்புகிறேன்!), ஹார்முஸ் ஜலசந்தியை கூடிய விரைவில் திறக்குமாறு அவர்கள் எங்களிடம் கோரியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட முயற்சித்து வருகிறது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தங்களிடம் ஈரான் கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தார். ரஷியா தங்களின் முழு ஆதரவையும் வழங்கும் என அவருக்கு புதின் உறுதியளித்தார். இந்த சூழலில் டிரம்ப் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஈரான் விவகாரத்தில் டிரம்ப், பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெம்செத்தால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.