என் மலர்
உலகம்

Volkswagen | முன்னணி கார் நிறுவனத்தில் 50000 பேர் நீக்கம்: அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி
- ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது வோக்ஸ்வேகன் நிறுவனம்.
- கடந்த சில ஆண்டாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
பெர்லின்:
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது வோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த சில ஆண்டாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களிடம் பணிசெய்யக்கூடிய ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன உற்பத்தி துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 50,000 பேரை படிப்படியாக வேலையில் இருந்து நீக்கப் போவதாக வோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதி இருக்கக்கூடிய ஆண்டு அறிக்கையில் வோக்ஸ்வேகன் சிஇஓ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நிறுவனத்தின் லாபம் கணிசமான அளவு குறைந்ததால் இந்த பணிநீக்க முடிவு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வாகன உற்பத்தி பிரிவு என மட்டும் இல்லாமல் மென்பொருள் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுமே இந்த பணிநீக்கத்தால் வேலையை இழக்க உள்ளனர்.






