Iran War | நெருங்கும் காலக்கெடு... உயிரை பணயம் வைத்த ஈரான் மக்கள் - வைரலாகும் மனித சங்கிலி வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Iran War | நெருங்கும் காலக்கெடு... உயிரை பணயம் வைத்த ஈரான் மக்கள் - வைரலாகும் மனித சங்கிலி வீடியோ
Published on

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

ஒப்பந்தத்தில், ஈரான் கையெழுத்திட மறுக்கும் பட்சத்தில் நாகரீகமே அழிந்து போகும் வகையில் மிக கொடூர தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், எட்டு மணி நேர கெடு நெருங்கி வரும் நிைலயில், ஈரானில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஈரானின் மின் உற்பத்தி நிைலயங்களை சுற்றி மக்கள் கைகோர்த்து, மனித கேடயங்களை உருவாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.

ஈரான் விவகரம் சர்வதேச அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மனித கேடய வீடியோ வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com