VIDEO: கொலம்பியாவில் 110 பேருடன் சென்ற ராணுவம் விமானம் கோர விபத்து

80 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
VIDEO: கொலம்பியாவில் 110 பேருடன் சென்ற ராணுவம் விமானம் கோர விபத்து
Published on

கொலம்பியாவில் 110 பேருடன் பயணித்த ராணுவ விமான விபத்துக்குளாகி உள்ளது.

இன்று(மார்ச் 23), கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுய்சாமோ பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெர்குலிஸ் C-130 ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

புவேர்ட்டோ லெகுய்சாமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

80 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com