என் மலர்tooltip icon

    உலகம்

    வெனிசுலா விவகாரம்: அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை
    X

    வெனிசுலா விவகாரம்: அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை

    • அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்பும்
    • அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும்

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வெனிசுலாவுடன் தற்போது நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் தொழில்துறையை விரைவாக மீண்டும் கட்டியெழுப்பவும், மில்லியன்கணக்கான பேரல் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா, வெனிசுலா மக்கள் மற்றும் முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு வரவும் உதவ முடியும்.

    எந்த நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செல்லும் என்பது குறித்த முடிவை நாங்கள் எடுப்போம். வெனிசுலா மிகவும் வெற்றிகரமானதாக இருக்கப் போகிறது.மேலும் அமெரிக்க மக்கள் பெரும் பயனாளிகளாக இருப்பார்கள்.

    அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும் என்றும், இது காலவரையின்றித் தொடரும் என்றும் வெனிசுலாவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை அணு ஆயுதங்கள் மோதல் இல்லாமல் விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தேன்.

    1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். வரலாற்றில் என்னை விட வேறு யாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    Next Story
    ×