எங்கும் மரண ஓலம்.. பதறவைக்கும் வீடியோக்கள் - இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்

இடிபாடுகளால் நகரம் முழுவதும் புழுதிப் படலம் சூழ்ந்துள்ளது.
வெனிசுலா
வெனிசுலா
Published on

கரீபியன் கடலில் அமைந்துள்ள தென் அமெரிக்க தீவு நாடு வெனிசுலா. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று மாலை வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

குறிப்பாக தலைநகர் கராகஸில் நிலநடுக்கங்களின் தீவிரம் அதீதமாக இருந்தது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இடிபாடுகளால் நகரம் முழுவதும் புழுதிப் படலம் சூழ்ந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

10,000 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் சேதங்கள் கணக்கிடப்பட்டு இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெனிசுலாவில் நாடு முழுவதும் பேரிடர்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com