அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறும் வெனிசுலா?.. டிரம்ப் முன்மொழிவை நிராகரித்த அதிபர் டெல்சி

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா இவ்வாறாக அமெரிக்காவின் மறைமுக கட்டுப்பாட்டுகள் சென்றது
அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறும் வெனிசுலா?.. டிரம்ப் முன்மொழிவை நிராகரித்த அதிபர் டெல்சி
Published on

இந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்க படைகள் அருகில் உள்ள தீவு நாடான வெனிசுலாவிற்குள் நுழைந்து அதிபர் மாளிகையில் தூங்கி கொண்டிருந்த அந்நாட்டின் ஆட்சியாளர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்தி அமெரிக்காவுக்கு கப்பலில் கொண்டு சென்றது.

போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மதுரோ மீது சுமத்தப்பட்டு அமெரிக்க சிறையில் அவர் அடைக்கப்பட்டார். வெனிசுலா இடைக்கால அதிபராக, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா இவ்வாறாக அமெரிக்காவின் மறைமுக கட்டுப்பாட்டுகள் சென்றது. அங்கு மதுரோவால் முடக்கப்பட்டிருந்த அமெரிக்க எண்ணெய் கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இணங்கவில்லை என்றால் டெல்சிக்கும் மதுரோவின் கதிதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இந்த சூழலில் வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் டிரம்ப்பின் முன்மொழிவை வெனிசுலா அதிபர் சிலியா நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. முன்னதாக 51வது மாகாணமாக கனடா நாட்டை மாற்ற வேண்டும் என டிரம்ப் கங்கணம் கட்டி செயல்பட்டார். ஆனால் அந்நாடு கடும் எதிர்வினை ஆற்றியது.

இந்த சூழலில் எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை முழுமையாக வளைத்துப்போட டிரம்ப் முடிவெடுத்து இயங்கி வருகிறார்.

வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற டிரம்ப் பேச்சு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த டெல்சி, "அத்தகைய சாத்தியக்கூறு ஒருபோதும் பரிசீலிக்கப்படவில்லை, மேலும் அது சுதந்திரத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டிற்கு எதிரானது. நாங்கள் எங்கள் சுதந்திரத்தை நேசிக்கிறோம்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com