

அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த சந்து (26) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்து, சிகாகோவில் உள்ள டீ பவுல் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருந்தார்.
அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் H-1B விசா விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, படிப்பு முடித்த புதிய மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.
சந்து கடந்த சில காலமாகத் தீவிரமாக வேலை தேடியும் பலன் கிடைக்கவில்லை. தனது செலவுகளுக்கு மீண்டும் பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஏப்ரல் 28 அன்று தனது அறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.
சந்துவின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் அங்குள்ள தெலுங்கு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 044-24640050 - சினேகா தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் (சென்னை)