ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. ஹார்முஸில் பிடியை இறுக்கிய ஈரான் - கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

அமெரிக்காவின் துரோகச் செயல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. ஹார்முஸில் பிடியை இறுக்கிய ஈரான் - கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
Published on

ஓமன் வளைகுடாவில் ஈரான் ஈரான் கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் துரோகச் செயல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் அனுமதிக்கப்படாது என்றும் அதன் வழியே கடக்க முயலும் என்ற கப்பலும் எதிரியாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று பாகிஸ்தானில் இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்க தரப்பு தெரிவித்த நிலையில் அதையும் ஈரான் மறுத்துள்ளது.

இதற்கிடையே ஹார்முஸ் பதற்றத்தால் ஞாயிற்றுக்கிழமையன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 7 சதவீதம் உயர்ந்து 96.88 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் உயர்ந்து 90.33 டாலராகவும் இருந்தது.

ஹார்முஸ் ஜலசந்தி எதிர்காலத்தில் சீரடைய வாய்ப்பில்லை என்ற அச்சமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

மேலும் பேச்சுவார்த்தைக்கு இணங்கவில்லை என்றால் ஈரான் உள்கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்படும் என நேற்று டிரம்ப் மிரட்டல் விருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com