

2026 பிபா உலகக் கோப்பை தொடருக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வட அமெரிக்காவிற்கு வரவிருப்பதால், எபோலா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்ட பொது சுகாதாரப் பயண நடவடிக்கைகளை அறிவித்தன.
மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் உலகளவில் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது.
மூன்று நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையில், "எபோலா வைரஸால் அதிக ஆபத்தில் உள்ள ஆப்பிரிக்க பகுதிகளில் இருந்து வரும் நபர்களுக்காக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த பொது சுகாதாரப் பயண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன" என்று தெரிவித்துள்ளன.
"இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, நமது எல்லைகளுக்கு இடையேயான பயணத்தையும் வர்த்தகத்தையும் பராமரிக்கும் அதே வேளையில், 2026 பிபா உலகக் கோப்பையின் போது நமது குடிமக்களையும், எதிர்பார்க்கப்படும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
வட அமெரிக்காவிற்கு உலகை நாங்கள் வரவேற்கும் இவ்வேளையில், இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு நபரின் உடல்நலமும் பாதுகாப்பும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது," என்று அவர்கள் மேலும் கூறினர்.