ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம்

ஈரானில் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும், அங்கு போர்நிறுத்தத்தை கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம்
Published on

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரைக் கையாளுவதற்காக வாஷிங்டனில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் இந்தப்போரில் சீனா உரிய அளவில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தராததால் சீனாவுக்கான அவருடைய பயணம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ஈரானில் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும், அங்கு போர்நிறுத்தத்தை கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக வருகிற மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டிரம்ப் பீஜிங் செல்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக ஈரான் உடனான போரில் மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் வாங் இ, "ஈரான் மீதான அமெரிக்கா போரை நிறுத்துவது குறித்து இருநாடுகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com