யாரை பற்றியும் நான் சிந்திப்பதில்லை.. அமெரிக்க பொருளாதார பாதிப்பு குறித்த கேள்விக்கு கைவிரித்த டிரம்ப்

சிறுதளவு கூட இல்லை. ஈரானை பற்றி பேசும்போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது.
யாரை பற்றியும் நான் சிந்திப்பதில்லை.. அமெரிக்க பொருளாதார பாதிப்பு குறித்த கேள்விக்கு கைவிரித்த டிரம்ப்
Published on

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு பயணத்தை மேற்கொள்வதைத் தொடர்ந்து நேற்று வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். இதன்போது, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கர்களின் எரிபொருள் மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பதை கவனத்தில் கொள்கிறீர்களா? செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், 'சிறுதளவு கூட இல்லை. ஈரானை பற்றி பேசும்போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது. அவர்களிடம் அணுஆயுதங்கள் இருக்க கூடாது என்பதே என்னுடைய முதல் நோக்கமாக இருக்கிறது.

அமெரிக்கர்களின் நிதிநிலைமையை பற்றி நான் சிந்திப்பதில்லை. யாரை பற்றியும் நான் சிந்திப்பதில்லை' என்று செய்தியாளர்களிடம் நேரடியாக பதிலளித்து சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com