

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
தங்களின் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன MQ-1 டிரோனை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் கடல் எல்லைக்குள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் நுழைந்த அமெரிக்க டிரோனை, வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் உடனடியாகக் கண்டறிந்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது
கடந்த செவ்வாய்க்கிழமையும் அமெரிக்காவின் மற்றொரு டிரோனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் காவல்படை குறிப்பிட்டுள்ளது. இது அமெரிக்காவின் பிரம்மாண்ட MQ-9 டிரோன் வகை ஆகும்.
மேலும், அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் தங்களுக்குப் பதிலடி கொடுக்கும் முழு உரிமை உண்டு என்றும் எச்சரித்துள்ளது.