அமெரிக்கா - ஈரான் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் - முழு விவரம்

ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகள் அமெரிக்காவால் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை
Published on

சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

பேச்சுவார்த்தை

இதில் அமெரிக்காவின் துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான குழு, ஈரான் சமயநாயகர் காலிபப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் அடங்கிய குழு பங்கெடுத்தது. மத்யஸ்தர்களான கத்தார் நாட்டின் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி பங்கெடுத்தனர்.

பேச்சுவார்த்தைக்கு இடையில், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட மிரட்டலை சுட்டிக்காட்டி ஈரான் குழு வெளிநடப்பு செய்தது.

இருப்பினும் பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு நேற்று நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

முக்கிய முடிவுகள்

அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரிவான இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான காலக்கெடுவை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த செயல்முறையைக் கண்காணிக்கவும், வழிகாட்டவும் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய ஒரு கூட்டு குழு உருவாக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான குழப்பங்களை தவிர்க்க அமெரிக்கா - ஈரான் இடையே நேரடியான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த 60 நாள் பேச்சுவார்த்தை காலத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை இது உறுதி செய்யும்.

தடை நீக்கம்

இதனிடையே ஒப்பந்தப்படி ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகள் அமெரிக்காவால் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன என்றும் முடக்கப்பட்ட சில சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டம்

முதல் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், பிராந்திய பாதுகாப்பு, அணுசக்தி விவகாரம், பொருளாதார தடைகள் நீக்கம் போன்ற இன்னும் தீர்க்கப்படாத இதரப் பிரச்சினைகள் குறித்து இந்த வாரம் முழுவதும் இரு நாட்டு குழுக்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com