ஹார்முஸ் பதற்றம்: தோஹா பேச்சுவார்த்தையில் தொடரும் குழப்பம்

இதனை இருதரப்புப் பேச்சுவார்த்தையாக கருத முடியாது.
ஹார்முஸ் பதற்றம்: தோஹா பேச்சுவார்த்தையில் தொடரும் குழப்பம்
Published on

அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இரு நாட்டுத் தலைமைகளும் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.

டிரம்ப்

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து கத்தார் தலைநகர் தோஹாவில் ஜூலை 1 ஒரு முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், இதற்கு ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், ஈரானே முன்வந்து இந்தப் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை விடுத்ததாகவும், இதனால்தான் தோஹாவில் இருதரப்புக் கூட்டம் நடைபெறுகிறது என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஈரான் மறுப்பு

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வரும் நாட்களில் அமெரிக்காவுடன் எந்தவொரு மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஈரான் அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் குழு இந்த வாரம் கத்தாருக்கு பயணம் மேற்கொள்வது உண்மைதான் என்றாலும், அதற்கும் அமெரிக்க அதிகாரிகளின் வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இதனை இருதரப்புப் பேச்சுவார்த்தையாக கருத முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

பேச்சுவார்த்தை

அமைச்சகம் மறுத்த போதிலும், பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தோஹாவில் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையானது , ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் என அவர் கூறினார்.

எனவே நாளை அமெரிக்க மற்றும் ஈரானிய குழு, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் மூலம் தனித்தனியாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அமெரிக்கா தரப்பில் அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னஆகியோர் இந்த அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com