வரலாறு மாறுகிறது.. இனி அமெரிக்க பாஸ்போர்ட்-களில் டிரம்ப் புகைப்படம்!

இந்த புதிய கடவுச்சீட்டின் உட்புறப் பக்கங்களில் இரண்டு படங்கள் இடம்பெறும்.
வரலாறு மாறுகிறது.. இனி அமெரிக்க பாஸ்போர்ட்-களில்  டிரம்ப் புகைப்படம்!
Published on

அமெரிக்க அதிபராக டிரம்ப் மற்றொரு அண்மையில் அமெரிக்க டாலர் நோட்டுகளில் தனது கையெழுத்தை இடம்பெறச் செய்யும் முடிவை அறிவித்தார். இந்த நோட்டுகளின் உற்பத்தி விரைவில் தொடங்கி புழக்கத்திற்கு வர உள்ளது.

அமெரிக்கா ஜூலை மாதம் தனது 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு அவர் இதை அறிவித்தார்.

அதே 250வது ஆண்டு விழாவை காரணம் காட்டி புதிய முடிவு ஒன்றை டிரம்ப் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்க பாஸ்போர்ட்களில் இனி டிரம்ப் உடைய படம் இடம் பெற உள்ளது. இதை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த புதிய கடவுச்சீட்டின் உட்புறப் பக்கங்களில் இரண்டு படங்கள் இடம்பெறும். ஒரு படத்தில், டிரம்பின் புகைப்படமும், அதன் கீழே தங்க நிறத்தில் அவரது கையொப்பமும் இருக்கும். இரண்டாவது படத்தில், அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தைகளின் வரலாற்று ஓவியம் இடம்பெறும்.

அமெரிக்கா ஜூலை மாதம் தனது 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இந்த சிறப்பு கடவுச்சீட்டுகள் வெளியிடப்படுகின்றன என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறியுள்ளார்.

தற்போதைய அமெரிக்க கடவுச்சீட்டுகளில் சுதந்திர தேவி சிலை மற்றும் நிலவில் கால் பதித்த வரலாற்று நிகழ்வின் படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com