

தெற்கு ஈரானில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் நகரில் முக்கிய ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பந்தர் அப்பாஸ் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தடுக்கும் பணியில் முடுக்கிவிடப்பட்டன.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தாக்குதல் குறித்து கூறுகையில், பந்தர் அப்பாஸ் நகரில் அமைந்திருந்த ஈரானின் தரைக்கட்டுப்பாட்டு மையம் தான் இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காகும்.
இப்பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாகப் பறந்த ஈரானின் பல போர் டிரோன்களை அமெரிக்கப் படைகள் நடுவானில் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்றும், தற்போதைய போர்நிறுத்தத்தை நிலைநிறுத்துவதற்காகவே இது செய்யப்பட்டது என்றும் அந்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.