

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடற்படை மற்றும் விமானப்படை கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது இரண்டு கடற்படை விமானங்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டன.
போய்சிக்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தளத்திற்கு அருகே, விமானம் தரையை நோக்கி வேகமாக விழுந்தன.
அப்போது வானத்தில் நான்கு பாராசூட்டுகள் திறக்கப்பட்டு விமானிகள் நால்வரும் உயிர் தப்பினர்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானக் கண்காட்சியின் எஞ்சிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த விபத்தில், வாஷிங்டனின் விட்பே தீவில் உள்ள எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரன் 129-ஐச் சேர்ந்த இரண்டு அமெரிக்க கடற்படை EA18-G கிரௌலர் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்று அமெரிக்க பசிபிக் கடற்படையின் கடற்படை விமானப் படைகளின் செய்தித் தொடர்பாளரான கமாண்டர் அமெலியா உமாயம் கூறினார்.