

அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த 7-ந்தேதி இரவு இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. நிரந்த போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில். இஸ்ரேல் லெபனான் மீது பயங்கரமான தாக்குதலை இன்று நடத்தியது. இதனால் ஈரான் பின் வாங்குவதாக தெரிகிறது.
அதேவேளையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜெ.டி. வான்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவருடன் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் குஷ்னர் ஆகிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நூர் கான் விமான தளத்தில் அமெரிக்காவின் விமானப்படையின் போக்குவரத்து விமானம் தரையிறங்கியுள்ளது. அதில் அதிகாரிகள் வந்தார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இஸ்லாமாபாத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரான் இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அறிவிக்கவில்லை.