டேக் ஆஃப் ஆனதும் விபத்தில் சிக்கிய அமெரிக்க விமானப்படை விமானம்

உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
டேக் ஆஃப் ஆனதும் விபத்தில் சிக்கிய அமெரிக்க விமானப்படை விமானம்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக அந்த தளம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கை:

"காலை 11:20 மணியளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ரக விமானம் விபத்துக்குள்ளானது" என்று அந்தத் தளம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

"அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்; மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வான்வழி படங்களில், அப்பகுதி முழுவதும் கருகிப்போயிருப்பதும், விமானத்தின் சிதைந்த பாகங்கள் மிகக் குறைவாகவே தெரிவதும் பதிவாகியுள்ளது.

அணு ஆயுதம்:

B-52 என்பது 1950-கள் முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும். 8,800 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

வியட்நாம், வளைகுடாப் பகுதி, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மிகச் சமீபத்தில் ஈரான் ஆகிய இடங்களில் நடந்த மோதல்கள் உட்பட பல ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்த ரக குண்டுவீச்சு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com