

அமெரிக்கா- ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் மூலம் நடைபெற்று வருகிறது. போரில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு இழப்பீடு, தடைகளை நீக்குதல், முடக்கிய சொத்துகளை விடுவித்தல் போன்று முக்கிய கோரிக்கைகளை ஈரான் முன் வைத்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் ஏற்க மறுத்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு டிரம்ப், சீனா சென்றிருந்தார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதன்பின் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், ஈரான் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
முன்னதாக விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் கொள்கை முடிவுகள் மூலம் ஈரானுக்கு ஏற்பட்ட விளைவுகளை சரி கட்ட இழப்பீடு வழங்கமாட்டோம். 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். ஈரான் தன்னுடைய அணுசக்தி திட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகளில் 25 சதவீதத்தை கூட ரிலீஸ் செய்ய மாட்டோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதை ஈரான் ஏற்குமா? என்று தெரியவில்லை. அதேவேளையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்த ஈரானின் முன்மொழிவு தொடர்பாக, அமெரிக்கா எந்தவொரு உறுதியான சலுகைகளையும் வழங்க தவறிவிட்டது ஈரானிய ஊடகங்கள் கூறியுள்ளன.